யானைக்கு பழம் கொடுக்க முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

"A person fined ₹10,000 for trying to feed fruit to a wild elephant, highlighting wildlife protection enforcement."

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் மூன்று நாட்களுக்கு முன்பு யானை ஒற்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக காரில் சென்ற கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) அந்த யானைக்கு வாழைப்பழம் கொடுக்க முயன்றார்.

இதைக் கண்ட யானை ஆவேசமடைந்து அவரை துரத்தத் தொடங்க, அவர் அலறி ஓடி காரில் ஏறி உயிர்தப்பினார். இந்த காட்சி சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு அளிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் வனத்துறையினர் விசாரணை நடத்தி அவரை அடையாளம் கண்டறிந்தனர். அதன் பேரில் கோபாலகிருஷ்ணனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வன விலங்குகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.