ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை – நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு!

"After a student reportedly died by suicide due to a teacher’s scolding, several school vehicles were set on fire during the night in an act of protest or retaliation."

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானாபரநல்லூர் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயி சங்கரகுமாரின் மகன் சபரி கண்ணன் (15), வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

இதனைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு நெல்லை-அம்பை சாலையில் மறியலில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

அதே நேரத்தில் நேற்று நள்ளிரவில் சிலர் பள்ளிக்குள் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேருந்துகளும் முழுமையாக எரிந்து நாசமானது. தொடர்ந்து நிகழ்ந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.