
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பணி நிமித்தமாக பைக்கில் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மோகன், எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்கினார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. போலீசார் வீர மரியாதையாக 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடலுக்கு மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், சக போலீசார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.