பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு: உறவினர்களுக்கு ஆடியோ அனுப்பி பெண் தற்கொலை!

"A tragic incident where a woman ended her life following a dispute with neighbors, after sending an emotional audio message to her relatives."

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு அடுத்தடுத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். வாசல் கேட்டை பூட்டுவது உள்ளிட்ட காரணங்களால் இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சுரேஷ், ஜெயசீலனின் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்து அவமானப்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஜெயசீலனின் மனைவி கார்த்திகா, தன்னுடைய உறவினர்களுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.