திடீரென ரயில் இஞ்சின் மீது ஏறிய பெண்ணால் பரபரப்பு!

"Image depicting a tense moment as a woman suddenly climbs onto a train engine, causing panic at the station."

சென்னை அருகே தாம்பரம் ரயில் நிலையம் அருகே கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் நின்று கொண்டிருந்த ரயில் இஞ்சின் மீது நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென 40 வயதுடைய பெண் ஒருவர் ஏறி நின்றுள்ளார்

அதை பார்த்த பொதுமக்கள் உடனே அதிர்ச்சி அடைந்து தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கீழே இறங்குமாறு பொதுமக்களும் போலீசாரும் அழைத்தும் அந்த பெண் காது கொடுக்கவில்லை.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த தாம்பரம் ரயில்வே போலீசார் தீவிர முயற்சியில் அந்த பெண்ணை பத்திரமாக கீழே இறக்கி காப்பாற்றினர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதும் மற்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தி தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பையும் சோம்பலையும் ஏற்படுத்தியது.