அதிமுக பெண் நிர்வாகி குடும்ப தகராறு – தடுக்க வந்தவர்களுக்கு அடி, உதை; போலீசார் வலைவீச்சு!

Visual representation of a family dispute involving an AIADMK woman functionary, with violence against interveners and police action underway

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வி மற்றும் அவரது சகோதரர் கணேசன் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறை தடுத்து நிறுத்த முயன்ற உறவினர்கள் இருவரை, செல்வியின் மகன்கள் கடுமையாக அடித்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தாக்குதலில் காயம் அடைந்த உறவினர்கள் இருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, செல்வி மற்றும் அவரது இரு மகன்கள் மீது போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் தொடங்கிய தகராறு இந்த அளவிற்கு செல்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.