மதுபோதையில் நடுரோட்டில் திருநங்கைகள் ரகளை – தடுக்க வந்த பெண் காவலரை தாக்கியதால் பரபரப்பு!

A group of transgender persons allegedly created a disturbance on a public road under the influence of alcohol and reportedly assaulted a woman police officer who intervened.

சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு திருநங்கைகள் இருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பெரும் சத்தம் போட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவலர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றபோது, அவரையும் பொதுமக்களையும் திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

உடனடியாக போலீசார் வந்து இருவரையும் ஆட்டோவில் ஏற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு அருகிலும் ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் இருவரையும் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.