
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருதை வழங்கி கொளரவித்தது இலங்கை அரசு.
இந்தியா- இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார பேசினார்கள்.
3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, கொழும்பு விமான நிலையத்தில் மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். பிரதமர் நரேந்திர மோதியை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது..
இந்த நிகழ்வை அடுத்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைத் தந்த மோதிக்கு, மீண்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா- இலங்கை இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி,சுகாதாரம் மற்றும் மருத்துவம் உட்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கையெழுத்தான ஒப்பந்தங்கள்
1.மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான HVDC இடைத்தொடர்பை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் .
2.இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும், இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்திற்கும் இடையே டிஜிட்டல் மாற்றத்திற்கான வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3.இலங்கையின் திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இந்திய, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4.இந்திய மற்றும் இலங்கை அரசுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் .
5.கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை மானிய உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6.இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கும், இலங்கை அரசின் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்திற்கும் இடையே சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
7.இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இந்திய மருந்தியல் ஆணையம் மற்றும் இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இடையே மருந்தியல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட இந்தியா – இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
இதையெடுத்து இலங்கையின் மிக உயரிய விருதான மித்ர விபூஷணா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கொளரவித்தார், இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க.
இதையெடுத்து உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா -இலங்கை இடையேயான உறவு நன்றாக உள்ளது. தீவிரவாத தாக்குதல், கொரோனா, மற்றும் பொருளாதார பிரச்சனையில் இலங்கை தவித்த போது இந்தியா துணை நின்றது என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது, இலங்கையில் உள்ள மூன்று கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும் என்றார்.மேலும் இந்திய தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்றார்.
இதை தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் அநுர குமார இந்தியா- இலங்கை இடையிலான நட்பு நெருக்கமானது, இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா 300 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது என்று உருதியளித்தார்.
மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியது மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். மீனவர்களை உடனே விடுவிக்கவும் அவர்களின் படகுகளை ஒப்படைக்கவும் வலியுருத்தினார். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.