
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருணைபாளையத்தில் பஞ்சர் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, காரில் வந்த கும்பல் திருடிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒரு தோட்டத்து வீட்டில் அந்த லாரி மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. லாரிக்கு வேறு வண்ணம் பூசி விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்த மூவரும் போலீசார் தடையுடன் கைது செய்தனர்.
திருடப்பட்ட லாரி மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.