ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம் – பில் கலெக்டர் கைது !

A bill collector was arrested for taking a ₹25,000 bribe in exchange for issuing a receipt.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்த மாது என்பவரின் மனைவி பெயரில் வீட்டுமனை வரி ரசீது வழங்கும் நடவடிக்கையில், அவரது நண்பரிடம் ரூ.25,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெறப்பட்ட தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், ஒசூர் மாநகராட்சி அலுவலக பில் கலெக்டர் ரஜினியை கைது செய்ய முயன்றனர். அதன்போது தப்பி ஓட முயன்ற ரஜினி கீழே விழுந்ததில் காலில் காயமடைந்தார்.

பின்னர் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஒசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.