மனைவிக்கு வேலை கொடுத்ததால் ஆத்திரம்… பேக்கரி கண்ணாடி உடைத்த இளைஞர் கைது!

"Young man arrested for smashing bakery glass after anger over wife being given a job"


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை அருகே மகாதேவபுரம் பகுதியில் ஒரு பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசாந்த் என்பவரின் மனைவி திவ்யா வேலை செய்து வந்தார். இதனை பிடிக்காத பிரசாந்த், மனைவிக்கு வேலை கொடுத்ததாக பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின் கோபத்தில் ஆத்திரம் அடைந்த அவர், பேக்கரியின் முன்புற கண்ணாடிகளை இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.