
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிவை கண்டுள்ளது
கடந்த 1 ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510 க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.68,080 க்கும் விற்பனையானது.
இந்த விலை இதற்கு முன்னர் இருந்த அனைத்து அதிகபட்ச விலையையும் முறியடித்து புதிய உச்சத்தை கண்டதாக சொல்லபட்டது
தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும் ஏப்ரல் 3ம் தேதியான நேற்று தங்கம் விலை அதிரடியாக புதிய உயர்வை சந்தித்தது.
அதாவது கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,560க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.68,480க்கு விற்பனையானது.
இது தங்க விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் கண்டது.
ஆனால், இன்று தங்க விலை ஒரே நாளில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,400-க்கும், ஒரு பவுன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது.
அதாவது , ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.160, பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலையும் குறைவடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.108- க்கு , ஒரு கிலோ ரூ.1,08,000-க்கு விற்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம், முதலீட்டாளர்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.