
சென்னை மதுரவாயல் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக புலனாய்வுச் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 10 பேரை கைது செய்தனர். இவர்கள் ஓஜி கஞ்சா, LSD ஸ்டாம்புகள், போதை மாத்திரைகள் என சுமார் அரை கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் புல்லட் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மதுரவாயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் போதை வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.