கேரளாவிலிருந்து சுற்றுலாவுக்கு வந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சோகம் !!

கேரளாவிலிருந்து சுற்றுலாவுக்கு வந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் 

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை காட்சி முனை பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்த சூழலில், கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த 23 வயதான ஜாகீர் என்பவர், தனது நண்பருடன் ஊசிமலை காட்சி முனை பகுதிக்கு சுற்றி பார்பதற்காக சென்றுள்ளார் 

அப்போது பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நண்பருடன் சென்ற போது அங்கு கூடு கட்டி இருந்த தேனீக்கள் களைந்து இவர்களை கொட்டியுள்ளது 

தேனீக்கள் கொட்டிய வேளையில் தப்பிக்க முயன்ற ஜாகீர், ஓடிச் சென்று பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்டார். 

இதைப் பற்றிய தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்த ஜாகீர் மற்றும் அவரது நண்பரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் 

இந்த சம்பவத்தில் ஜாகீர் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் அவரது நண்பர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக  கூறப்படுகின்றது 

சம்பவம் தொடர்பாக நடுவட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் உயிரிழந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிப்பதோடு, வன உயிரினங்கள் மற்றும் பறவை இனங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்தாமல், பாதுகாப்பாக சுற்றுலாவை அனுபவிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.