
தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்தது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், போக்சோ சிறப்பு நீதிபதி கணேசன் ஹரி கிருஷ்ணராஜுக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சமும், பாலியல் சீண்டலுக்கு ஆளான மற்றொரு சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.