
சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சைபர் மோசடி செய்ததாகக் கூறி, சட்டக் கல்லூரியில் படிக்கும் மூவர் அவர் வீட்டுக்குள் புகுந்து கடத்தி சென்றுள்ளனர். மேலும் 72 ஆயிரம் ரூபாய் சேர்த்து 2 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என மிரட்டி பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து புகார் கிடைத்ததும், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து எழும்பூர் ரயில்நிலையம் அருகே 15 நிமிடத்தில் மூவரையும் கைது செய்தனர்.
சைபர் மோசடி வழியில் ரபீக்கின் வங்கி கணக்கில் இருந்து அந்தக் கும்பலின் வங்கி கணக்குக்கு பணம் மாற்றப்பட்டதாகத் தெரிய வந்ததால், ரபீக்கும் மோசடியில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.