திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : பயணி கைது!

பாங்காங்கில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் சுங்கத்துறையினர் நடத்திய  சோதனையின் போது, ரூ.12 கோடி மதிப்புடைய உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா (11.8 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வான் நுண்ணறிவு சுங்கத்துறை  அதிகாரிகளுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலையம் முழுவதும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஒரு பயணியின் உடைமையில், 11.8 கிலோ எடை கொண்ட 28 பாக்கெட்டுகள் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவரை NDPS சட்டத்தின் கீழ் கைது செய்து தடை செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா எப்படி கடத்தி வரப்பட்டது? பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலுடன் தொடர்பு இருக்கிறதா? இந்த சட்டவிரோதமாக பெறப்படும் பணம் புழக்கத்தில் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.