
சென்னை தாம்பரம் பகுதியில் சைபர் கிரைம் போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்தி வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்த அந்தோணிதாசை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறிஞ்சி நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர்கள் பைக்குகளை எடுத்துச் செல்ல முயன்றதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் அந்தோணிதாசு, போலீஸ் அதிகாரி போல காக்கி கலர் பேண்ட் அணிந்து, சைபர் கிரைம் போலீஸ் என்று கூறி இளைஞர்களை மிரட்டியதும், அவர்களிடம் பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது.
மேலும் அந்தோணிதாசு திருடிய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.