ரயில்வே ட்ராக்கில் தலை துண்டாக்கப்பட்டு கிடந்த ஆண் சடலம்!

"Decapitated male body discovered on railway track, investigation underway."

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இன்று காலை மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில், திருவெறும்பூர் பகுதியை கடந்தபோது, ஒருவர் தலை துண்டப்பட்ட நிலையில் ரயில்வே ட்ராக்கில் கிடப்பதை ரயில்வே ஊழியர்கள் பார்த்துள்ளனர்

உடனே இது குறித்து பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் திருச்சி அண்ணாவளைவு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் ஆசாரி என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்துக்கு ஆளானாரா என்பதில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலை துண்டப்பட்ட நிலையில் சடலம் கிடைத்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.