நிலத்தகராறு பிரச்சனையில் தாய் மற்றும் மகனை வீடு புகுந்து தாக்கிய போலீசார்!

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டையில் அறநிலையத்துறை இடத்தில் வீடு கட்டி வரும் நபரை தங்கபாண்டி குடும்பத்தினர் தடுத்ததால்  தங்கபாண்டி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரினை விசாரிக்க வந்த வேடசந்தூர் போலீசார் புகார் அளித்த தங்கப்பாண்டியின் மனைவி மற்றும் மகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

தாயார் மற்றும் மகன் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலத்தகராறு பிரச்சனையில் புகார் அளித்தவர்களையே போலீசார் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.