ரயில்வே கேட் திறந்தே இருந்ததால் விபத்து ? – காயமடைந்த மாணவர் வாக்குமூலம்!

"An accident caused by an open railway gate; injured student shares eyewitness statement."


கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்து, மேலும் சில மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளளார்

இந்த விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் கேட் கீப்பரை கடுமையாக விமர்சித்து அவரை தாக்கியுள்ளனர். போலீசார் கேட் கீப்பரை பொதுமக்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என்றும், கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றபோது ஓட்டுநர் தான் முட வேண்டாம் என கோரியதால் தான் அனுமதித்ததாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது.

ஆனால், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓட்டுநர் சங்கர், “நான் கேட் கீப்பரிடம் எதுவும் கூறவில்லை” என்று பேச முடியாத நிலையிலும் தலையசைத்து தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அதேபோல் விபத்தில் உயிர் தப்பிய மற்றொரு மாணவர், “கேட் தொடக்கம் திறந்தே இருந்தது. ரயில் ஹாரன் ஒலிக்கவே இல்லை. கேட் கீப்பர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. விபத்துக்கு பிறகும் அவர் வெளியில் வரவே இல்லை,” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த புதிய தகவலால் கேட் கீப்பரின் அலட்சியம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. விபத்து தொடர்பான விசாரணையை ரயில்வே மற்றும் காவல்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.