
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கிருஷ்ணசாமி பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் இன்று காலை மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வேகமாக வந்த பயணிகள் ரயில் வேனை நேருக்கு நேர் மோதியுள்ளது
இந்த விபத்தில் நிவாஷ் (6ம் வகுப்பு) மற்றும் சாருமதி (11ம் வகுப்பு) உடன் சேர்த்து 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் டிரைவர் உட்பட மற்ற இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர சம்பவம் கடலூர் மாவட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தண்டவாளங்களை கடக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட வேண்டுமென பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.