
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தில், தம்பி தனது மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகப்பட்ட அண்ணன், நண்பர்களுடன் சேர்ந்து தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த ராகுல் (22) தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கடந்த 1-ஆம் தேதி நள்ளிரவு அவரது அண்ணன் கௌதம் என்பவர் தனது நண்பர்கள் பிரவீன் குமார், விக்ரம் ஆகியோருடன் சேர்ந்து ராகுலின் தலையில் அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளார்
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ராகுலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும், வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கௌதத்தின் மனைவியுடன் ராகுல் அடிக்கடி பேசியதாகவும், இருவரும் நேரமின்றி சந்தித்து பழகுவதாகவும் கௌதத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் நட்பு தொடர்ந்ததால், தம்பியை பழிவாங்க கௌதம் திட்டமிட்டு நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
காரைக்கால் போலீசார் விசாரணையில், கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் ராகுலை வெட்டிக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.