
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பவபூரணி (28) என்ற மருத்துவர், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படித்து வந்தார். விடுதி வளாகத்தில் தங்கி படித்து வந்த அவர், கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் திரும்பி வராததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது தோழிகள் கதவை தட்டி பார்த்தும் திறக்க முடியவில்லை. அடுத்ததாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கழிவறை கதவு உடைக்கப்பட்ட போது, பவபூரணி உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இது குறித்து தகவல் பெற்ற பீளமேடு போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்தில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.