
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (55), களம்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு பணியை முடித்து இரவு நேரத்தில் பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது போளூர் அருகே பாக்மார்பேட்டை பகுதியில், திடீரென நிலை தடுமாறி பைக்கிலிருந்து விழுந்தார்.
படுகாயம் அடைந்த அவரை அப்பகுதிவாசிகள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை கிண்டி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.