திருச்சி போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை!

"Couple dies by suicide after jumping on railway tracks"

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா (51), ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தார்.

இந்நிலையில், இருவரும் 06.07.2025 ம் தேதியன்று வகுரம்பட்டி அருகே சரக்கு ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த தம்பதியின் மகளுக்காக திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளதுடன் அவரை தான் திருமணம் செய்வேன் என தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் மன அழுத்தம் அடைந்த தம்பதியர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நாமக்கல் மற்றும் திருச்சி பகுதிகளில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.