
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே முன்பே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது, எதிர்பாராத விதமாக இரு தரப்பினர் ஒன்றையொன்று பார்த்துக் கொண்ட நிலையில் வாக்குவாதம் முற்றி மோதலில் மாறியது.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் அங்கு இருந்த மருத்தவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகினர். திடீர் மோதல் காரணமாக மருத்துவ பணிகள் சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டன.
பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தின் தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் கட்டுப்படுத்தி, அமைதிப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.