
தீமிதி திருவிழாவில் 6 மாத குழந்தையுடன் நபரொருவர் தடுமாறி விழுகும் அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது
சிவகங்கை மாவட்டம், நாமக்கல் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா நடந்துள்ளது
அந்த தீமிதிப்பு திருவிழாவில் குமார் என்ற நபர் தனது 6 மாத குழந்தையையும் தூக்கிக்கொண்டு தீ மிதிக்க சென்றுள்ளார்
அப்போது , நடந்து கொண்டிருக்கும் போதே நிலை தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்துள்ளார்.
நல்வாய்ப்பாக, அவர்கள் தீயில் நேரடியாக விழாமல் அருகிலுள்ள நிலத்தில் விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார்
அந்த நேரத்தில் அருகில் இருந்த பக்தர்கள் உடனடியாக அவர்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்
சிறு காயங்களுடன் இருவரும் உயிர்தப்பினாலும், இந்த சம்பவம் திருவிழா நடைபெறும் இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது
தீமிதி திருவிழா பக்தியின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாலும், இத்தகைய நிகழ்வுகளில் குழந்தைகளையும் ஈடுபடுத்துவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது
பக்தியின் பேரில் இப்படியான அபாயகரமான செயல்களை மேற்கொள்வது சரியானதா என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவதுடன் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.