
அணு ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தீவிர நிலையை எட்டியுள்ளது தெரிவிக்கப்படுகின்றது
2015 ஆம் ஆண்டு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சர்வதேச தடைகளை நீக்குவதற்காக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது.
ஆனால், 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்
தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி வந்தார்
இதன் காரணமாக, புதிய அணு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்த போது அதற்கு அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தாயார் இல்லையென்று ஈரான் திட்டவட்மாக தெரிவித்திருந்தது
பின்னர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், ஈரான் மீது குண்டுகள் வீசப்படும் எனவும் வர்த்தக தடைகளை மேலும் கடுமையாக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்
டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு தக்க பதிலடியளித்துள்ள ஈரான் நாட்டின் தலைவர் அயதோல்லா அலி கமேனி, தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா கூறிவருவது போல எவராலும் ஒன்றும் செய்யமுடியாது எனவும் அதையும் மீறி ஈரான் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அமெரிக்காவுக்கு அதற்கேற்ற பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையில் நடந்து வரும் பனிப்போர் உலகநாடுகளின் மத்தியில் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.