
சென்னை எழும்பூர் பகுதியில் நகை வியாபாரம் செய்து வரும் இயங்கி ரவி, கடந்த வியாழக்கிழமை அங்கு வியாபார வேலைகளுக்காக சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் முகவரி கேட்பதுபோல நடித்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரவியை தாக்கி கண்ணை கட்டி காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவரது கைப்பையில் இருந்த ரூ.31 லட்சம் மற்றும் கால் கிலோ தங்க நகைகளை பறித்து, போரூர் பகுதியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணமும் நகைகளும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஏன் நகை வியாபாரியை குறிவைத்தனர் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.