
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆல்பர்ட் (18) என்பவர், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்றுவந்தார். இன்று காலை கல்லூரிக்குச் செல்ல தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது பேருந்தில் இடம் இல்லாததால், படியில் தொங்கியவாறு பயணித்தார். அதே போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த உடனே, அவர் மீது பேருந்தின் பின்பக்கச் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்து டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்