
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த காமாட்சி என்ற பெண் அதிகாரி, காவல்நிலைய ஓய்வறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் சந்தேகிக்கத்தக்க காரணம் இருக்கிறதா என்று போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.