பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது – 1100 மாத்திரைகள் பறிமுதல்!

"Three arrested for selling drug pills to school and college students; 1,100 tablets seized by police."

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு சென்று வலி நிவாரணி மாத்திரைகளை பெருமளவில் வாங்கி வந்ததாகவும், அதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை என விற்பனை செய்துவருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் போலீசார் அவர்களிடம் இருந்த 1100 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மீது எதிர்மறை தாக்கம் ஏற்படுத்தும் இந்த மாதிரியான சம்பவங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கக்கோரி பொதுமக்களும், பெற்றோர்களும் காவல்துறையிடம் கேட்டு கொண்டுள்ளனர்