
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் சுரேஷ்குமார் அலுவலக பணிக்காக கொடுக்கப்பட்ட கார் மீது ஏறி அமர்ந்து சினிமா வசனங்களுக்கு இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வட்டாச்சியர் அலுவலகத்தில் யாரும் இல்லாத போது இளைஞர் ரீல்ஸ் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள சிந்தலகுப்பம் பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற 30 வயது உடைய இளைஞர் வட்டாச்சியர் கார் மீது கால் மேல் கால் போட்டு அமர்ந்து சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் எடுத்துள்ளார். வீடியோவை வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் வட்டாச்சியர் சுரேஷ்குமார் தரப்பில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தேவநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு சொத்துகளை முறையற்ற முறையில் பயன்படுத்துவது குற்றமாக இருப்பதால், காவல்துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.