
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாயனசெருவு கவரண்வட்டத்தை சேர்ந்த 30 வயது விஜயன், 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 வயது குழந்தையும் உள்ளது. கடந்த மார்ச் 17ஆம் தேதி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜயன் திடீரென உயிரிழந்ததாகக் கூறி வெண்ணிலா கதறி அழுதார். இளம் வயதில் கணவனை இழந்த துக்கத்தில் அவள் அழுவதாக நினைத்து ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த மரணம் சந்தேகத்துக்கிடமாக இருந்ததால் திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கிடைத்த உடற்கூராய்வு அறிக்கையில் விஜயன் இயற்கையாக இறக்கவில்லை, மூச்சுத்திணற வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.
உடனே விஜயனின் மனைவி வெண்ணிலா மீது போலீசார் சந்தேகம் கொண்டு அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது வெண்ணிலாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது என்றும், அந்த உறவு திருமணத்தை மீறி காதல் உறவாக மாறியதும் உறுதி செய்யப்பட்டது. சஞ்சய் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாகவும் தெரிய வந்தது.
சஞ்சயுடன் வாழ விரும்பிய வெண்ணிலா, தனது கணவர் விஜயன் தடையாக இருப்பதாக நினைத்து கொலையை திட்டமிட்டுள்ளார். தனது ஆசையை நிறைவேற்ற சக்திவேல், நந்தகுமார், சபரிவாசன், அழகிரி உள்ளிட்ட ஐந்து பேருடன் இணைந்து கொலையை திட்டமிட்டு கடந்த மார்ச் 17ஆம் தேதி இரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜயனின் கை, கால், வாயைக் கட்டி மூச்சை அடக்கி கொலை செய்துள்ளனர்
இது போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் தெரிய வந்ததும், போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வெண்ணிலாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த மரணம் சந்தேகத்துக்கிடமாக இருந்ததால் திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கிடைத்த உடற்கூராய்வு அறிக்கையில் விஜயன் இயற்கையாக இறக்கவில்லை, மூச்சுத்திணற வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.
உடனே விஜயனின் மனைவி வெண்ணிலா மீது போலீசார் சந்தேகக் கணை திருப்பினர். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது வெண்ணிலாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது என்றும், அந்த உறவு திருமணத்தை மீறி காதல் உறவாக மாறியதும் உறுதி செய்யப்பட்டது. சஞ்சய் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாகவும் தெரிய வந்தது.
சஞ்சயுடன் வாழ விரும்பிய வெண்ணிலா, தனது கணவர் விஜயன் தடையாக இருப்பதாக நினைத்து கொலையை திட்டமிட்டுள்ளார். தனது ஆசையை நிறைவேற்ற சக்திவேல், நந்தகுமார், சபரிவாசன், அழகிரி உள்ளிட்ட ஐந்து பேரை பணியமர்த்தி கொலைக்கான சூழலை உருவாக்கியுள்ளார். கடந்த மார்ச் 17ஆம் தேதி இரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜயனை கை, கால், வாயைக் கட்டி மூச்சை அடக்கி கொலை செய்தனர்.
இது போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் தெரிய வந்ததும், போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வெண்ணிலாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவனை கொன்று காதலனுடன் வாழ திட்டமிட்ட மனைவி சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.