காருக்குள் மது அருந்தி விட்டு உறங்கிய இருவர் உயிரிழப்பு!

"Two men found dead inside a car after consuming alcohol and falling asleep."

திருப்பதி தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான திலீப் மற்றும் வினய் இருவரும் காரில் தார்ப்பாய் போர்வையுடன் மூடி, ஏசி இயங்கும் நிலையில் காருக்குள் இருந்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் காரை பூட்டி அதே நிலையில் உறங்கியதால் ஆக்ஸிஜன் பஞ்சம் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரவு முழுக்க வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி சென்று காரை பார்த்துள்ளனர். செல்போன் ரிங்டோன் சத்தம் காருக்குள் இருந்து கேட்டு காரை திறந்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.