
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு என்பதை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவற்றில் Common DPயாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா உதயசூரியன் நம்மை அடக்க நினைத்தால் நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம் இது தான் தமிழர்களின் தனிக்குணம் என்று தெரிவித்துள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுவே மேலும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுக உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் நோக்கம். மேலும் உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலமாக இதுவரை 26 தொகுதிகளின் நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் 2026 தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் தற்போது உடன்பிறப்பே வா என்ற தலைப்பின் மூலமாக நிர்வாகிகளை சந்தித்தோம் பின்னர் நான் சந்தித்த நிர்வாகிகள் நேரடியாக மக்களை சந்தித்து எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு திமுக ஆட்சியில் செயல்படுத்திய நன்மைகள் என்னென்ன கிடைக்காமல் இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் சேகரித்து உடனியாக தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
களப்பணியை கட்சியினர் ஒன்று சேர்ந்து எந்தவித பாகுபாடின்றி செயல்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மாவட்ட செயலாளர்களுக்கு இன்னும் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.