
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட பீடி இலைகள் கடத்த முயன்ற போது போலீசார் மடக்கிபிடித்துள்ளனர்
ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருக்கின்ற தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஃபைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த படகு ஆரோக்கியம் என்ற நபருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து கடத்தல் கும்பல் தப்பி ஓடிய நிலையில், அவர்களைப் பிடிக்க கடலோர போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடலோரப் பகுதிகளில் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.