
திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் கடந்த இரவு செய்த சோதனையில், கோலாலம்பூரிலிருந்து வந்த பேட்டிக் விமான பயணியின் உடமைகளில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அணில்குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த அணில் குரங்கு அழிந்து வரும் அரிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் விமானம் மூலமாக இதனை எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் தடையை மீறி, உரிமம் இல்லாமல் உயிரினத்தை கொண்டு வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அணில்குரங்கை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.