
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியில் தனுஷ் — விஜயஸ்ரீ என்ற ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து தனுஷின் தம்பி கடத்தப்பட்டதாக வந்த புகாரில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கேவி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி முக்கிய குற்றவாளியுடன் நெறுங்கி செயல்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நேற்று அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி விட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
அவரை பிடிக்க திருவள்ளூர் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவன் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றப்பத்திரிகை பதியப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.