அ.தி.மு.க கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு உண்டு என ராஜேந்திரபாலாஜி தகவல்!

"Rajenthra Bhalaji states that T.V.K. may join the AIADMK alliance."

அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி, ‘‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில், திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழு முயற்சி எடுத்து வருகிறார்’’ என்றார்.

அதிமுக கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பை மறுக்க முடியாது என்றும், எதிர்காலத்தில் அதிமுக தலைமையகம் அதற்கான முடிவை எடுக்கும் என்று கூறினார்.

இந்தப் பேச்சு எதிர்வரும் தேர்தல் அரசியல் கூட்டணிகளில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.