27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

"Shocking incident where a father kills his 27-year-old daughter by slitting her throat."

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் 27 வயது மகள் அபிதா, இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு தந்தை அர்ஜூனன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

மகளை அந்த காதலை கைவிடுமாறு பலமுறை வலியுறுத்திய போதும் அபிதா மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது ஆத்திரம் அடைந்த அர்ஜூனன் தனது மகளை கழுத்தறுத்துக் கொலை செய்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த பிறகு அர்ஜூனன் நேரில் காவல் நிலையத்திற்கு சென்று  சரணடைத்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.