பெங்களூரில் 13வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி !

"Tragic accident as young woman falls from 13th floor in Bengaluru and dies"

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்தக் கட்டடத்தின் 13வது மாடியில் தனது நண்பர்களுடன் கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இளம்பெண், அங்கு ரீல்ஸ் எடுக்க முயன்றபோது திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்

மின் தூக்கி ((lift)) அமைப்பதற்கு இடைவெளியாக வைக்கப்பட்ட பகுதி வழியே கால் தவறி  கீழே விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் விபத்தா, அல்லது பின்னணி கொலையா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்மம் அதிகரித்துள்ளதால் CCTV காட்சிகளும் சேகரிக்கப்படுகின்றன.