Chennai IIT வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை : வடமாநில இளைஞர் கைது!

"North Indian youth arrested for sexually harassing a student inside IIT Chennai campus"

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி வளாகத்துக்குள் சென்ற வடமாநில இளைஞர் ஒருவர், அங்கு இருந்த ஒரு மாணவியை நோக்கி கைதுகட்டையை காட்டி மிரட்டியதாகவும், பின்னர் மாணவியின் முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.