
திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது, பள்ளி அருகே போதைப்பொருளக்கு அடிமைகளாக உள்ள சில இளைஞர்கள் மது அருந்துவதை பார்த்து, அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார்
இந்தச் சம்பவத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பள்ளி முடிந்த பிறகு சையது முகமதின் அருகே சென்று, அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றுள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர் உடனடியாக அலறியபடி தப்பியோடி உயிரை காத்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்த இளைஞர்களிடம் இருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோல் கேனையும் ஆசிரியர்தட்டியெறிந்து விட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில், முகம் மற்றும் கண்களில் பெட்ரோல் பதியப்பட்டதால் எரிச்சல் ஏற்பட்டு, சையது முகமது அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் 4 போதை இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.