
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றிய பச்சையம்மாள் என்ற பெண், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு வரை பச்சையம்மாள், பொதுமக்களிடமிருந்து சுமார் ₹4 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. அந்த தொகை PACL நிறுவனத்தில் செலுத்தப்பட்டது. அவரது கீழ் 70 சப்-ஏஜெண்ட்கள் பணியாற்றியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், PACL நிறுவனம் திவாலாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததற்காகப் பச்சையம்மாளை குற்றம் சாட்டி கொலை மிரட்டல்கள் விடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னாள் சென்று பச்சையம்மாள் கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்
70 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட பச்சையம்மாள், தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்
இந்த சம்பவம் தொடர்பாக, அவரது கணவர் மலைச்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முதலீட்டாளர்கள் மற்றும் முன்னாள் சப்-ஏஜெண்ட்களும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.