
காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை அருகே உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர் லக்சன், நீரில் முழ்கி மாயமான நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது
சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவரின் காலணி ஏரிக்குள் விழுந்த நிலையில், அதை எடுக்க லக்சன் நீரில் இறங்கியுள்ளார்
அவருக்கு நீச்சல் தெரியும் என கூறி நீருக்குள் சென்ற நிலையில், நீரில் இறங்கிய சில நிமிடங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், நீண்ட நேரம் நீந்த முடியாமல் தத்தளித்து காணாமல் போனதாகவும், அருகிலிருந்தவர்கள் கூறுகின்றனர்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்புத் துறையினர், மீட்பு குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல மணி நேரமாக தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவரின் விபரம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பின்றி இயற்கை நீர்நிலைகளில் இறங்கும் போது ஏற்படும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டும் விதமாக இந்த துயரச்செய்தி அமைந்துள்ளது.