
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சிச மங்கலம் பகுதியில் வாழ்ந்த இளம்பெண் ரேணுகாதேவி, பணியை முடித்தபின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் திடீரென அதே பகுதியிலுள்ள ஏரிக்கரைியல் தந்தை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் , ஏரியில் நேராக குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தந்தை அலறியபடி உதவிக்காகக் கத்தியுள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து வந்து, சுமார் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளம்பெண்ணின் சடலத்தை ஏரியில் இருந்து மீட்டனர்.
இந்த தற்கொலையின் பின்னணியில் காதல் தோல்வி காரணமா அல்லது குடும்ப தகராறு காரணமா என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண்ணின் தற்கொலை சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.