பாஜக பிரமுகருக்கு பட்டாக்கத்தி கொண்டு கொலை மிரட்டல் : ஓய்வு பெற்ற SSI மீது போலீசார் வலைவீச்சு!

Retired SSI wanted after allegedly issuing a machete death threat to a BJP functionary; police on the hunt.

திருவள்ளூர் மாவட்டம் இளவூர் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகு பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ள கட்டடம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) முனிரத்தினம் என்பவரால் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அலுவலகத்தை காலி செய்யுமாறு முனிரத்தினம் பலமுறை கேட்டும், தியாகு கால அவகாசம் கோரியதாக கூறப்படுகிறது.

இதனால் எழுந்த வாக்குவாதம் கோபமாக மாறி, முனிரத்தினம் அலுவலகத்திற்கு பட்டாக்கத்தியுடன் சென்று தியாகுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இளவூர் போலீசார், சம்பந்தப்பட்ட முன்னாள் SSI முனிரத்தினத்தைக் கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.