வக்ஃப் சட்டத்திருத்துக்கு  எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறை வேற்றம் !!

வக்ஃப் சட்டத்திருத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறை வேற்றம்

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மசோதவை ஆய்வு செய்த நாடளுமன்ற நிலைக்குழு 655 பக்க அறிக்கை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலே இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படடுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வஃக்ப் மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த மசோதாவுக்கு  அதிமுக,பாமக,மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது, இதையெடுத்து தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.